Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்-பியூஷ் மானுஷ்

ஐயப்பன் வனம்.. தர்மபுரி மாவட்டம் சேலம் பெங்களூர் சாலை தொப்பூர் என்ற இடத்திலிருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் பியூஸ் அவர்களின் உழைப்பாள் தயாரிக்கொண்டிருக்கும் கூப் பாரஸ்ட்..





2009 ஆம் ஆண்டு வரண்ட நிலமாக இருந்த நிலத்தை நண்பர் பியூஸ் வாங்கியுள்ளார்.. சுற்றிலும் மலைகள்.. அந்த கிராமம் முழுவதும் வரட்சியால் பஞ்சம் தலைவிரித்தாடி வந்துள்ளது.. மொத்தம் நூற்று நாற்பது ஏக்கர் நிலத்தை பியூஸ் மற்றும் அவரது முப்பதி ஐந்து நண்பர்கள் இணைந்து வாங்கியுள்ளனர்.. வாங்கியவுடன் ஆங்காங்கே குளங்களை வெட்டியுள்ளார் பியூஸ்.. கண்டகண்ட இடங்களில் மூங்கில் நாற்றுக்களையும், மரக்கன்றுகளையும் நட்டுள்ளார்.. அந்த வருடம் கடும் வரட்சி.. மிகவும் சிரமத்திற்க்கு இடையே நட்ட மரக்கன்றுகளை நீர் ஊற்றி காப்பாற்றி வந்துள்ளார்..

வழக்கம் போல அக்கிராம மக்களும் பியூஸை ஏளனமாத்தான் பார்த்துள்ளனர்.. ஆனால் இவர் அவர்களை சட்டையே செய்துகொள்ளவில்லை.. முழுவதும் மரங்களாலும், மலைகளாளும் இப்போது பசுமை போர்த்தி கிடக்கிறது இந்த வனம்.. எங்கு பார்த்தாலும் நீர் ஓடிக்கொண்டுள்ளது.. இருபதிற்க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள்.. வரண்ட பூமி எப்படி பசுமை ஆனது. எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது என்று நாங்கள் கேட்ட போது அவர் சொன்ன பதில்..

நான் படித்துக்கொண்டிருந்த போது நாங்கள் வசித்து வரும் பகுதியில் (சேலம்) மாரியம்மன் கோவில் கட்டுகிறோம் என்று நன்கொடை ரசீதை எடுத்து வந்தனர் அப்பகுதி மக்கள்.. என் தந்தைக்கு நன்கொடை கொடுக்க ஆசை ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போதைய தேவை வெறும் கோவில் மட்டும் அல்ல குளங்களும்தான் என்று முடிவு செய்திருந்தேன்..

நம்முன்னோர்கள் கோவில்கட்டுவதற்கு முன் குளங்களை வெட்டினர்.. அப்படி செய்தததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருந்தது.. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.. குளங்களை மூடி கோவிலை கட்டி கோபுரம் எழுப்புகிறார்கள். அன்று முடிவு செய்தேன் மக்களுக்கு தேவை மாரியம்மன் கோவில் அல்ல “மாரிஸ்தலம் ” என்று.. மாரி என்றால் மழை.. மேகம் மழையாக பொழிந்து நீராக மாறி ஊற்றெடுத்து குளங்களில் வந்து சேர்ந்தால் அது தான் உண்மையான கோவில் என்று முடிவு செய்தேன்.. அந்த பணத்தை வைத்து நண்பர்களுடன் இணைந்து அந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குளங்களை விடுமுறை நாட்களில் தூர்வாரினோம்..



ஆரம்பத்தில் நண்பர்கள் இணைய தயங்கினர்.. ஆனால் இப்போது சேலம் பகுதி மக்கள் எங்களை பின்தொடர்கிறார்கள்.. அப்படி நண்பர்களுடன் இணைந்து இது வரை மூக்கனேரி, அம்மாபேட்டை ஏரி, தர்மபுரியில் ஓர் ஏரியை சுத்தம் செய்து தூர்வாரி அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி உள்ளோம் என்றார்.. சரிங்க இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆனது என்றேன்..

சார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னரே பாக்குமட்டை தட்டு அறிமுகம் செய்ததே நான்தான்.. ஆரம்பத்தில் விற்பனை செய்முடியவில்லை, கடைகளில் ஏறிஇறங்கி கேட்டேன் வாங்க மறுத்துவிட்டனர்.. மனம் தளரவில்லை, என்னுடைய மார்வாடி புத்தியை வைத்து வியாபாரம் செய்தேன் என்றார்..

அதென்னெங்க மார்வாடி புத்தி என்றேன்.!!??

நான்கு பசங்களை வேலைக்கு அமர்த்தினேன் என்றார்..

என்னங்க நீங்க உற்பத்தி செஞ்ச பாக்குதட்டை விற்க்க முடியலைனு சொல்றீங்க பிறகு எதற்கு வேலை ஆள் என்றேன்..

நான் ஏறி இறங்கிய அதே கடைளில் இந்த வேலையாட்களை வைத்து கடைக்காரரிடம் “பத்து பாக்குத்தட்டு கொடுங்க இருபது பாககுத்தட்டு கொடுங்க ” என்று தினமும் கேட்க்க வச்சேன்!!

பிறகு பாருங்க அந்த கடைக்காரர்கள் என்னிடம் போட்டி போட்டு பாக்குத்தட்டை வாங்கி விற்க்க ஆரம்பித்துவிட்டனர் ” என்று சிரித்துக்கொண்டே சொல்லி எங்களையும் சிரிக்க வைத்தார் பியூஸ்.. எப்படியோ ங்க இப்போது எல்லா நிகழ்ச்சி களிலும் இந்த பாக்கு தட்டு பயன்படுத்துகிறார்கள் எனும் போது மகிழ்ச்சியே என்றார்.. அவர் சொன்னதும் ஞாயம் தாங்க.. சூழல்மாசுபடாம இருக்க இந்த மாதிரி புத்தியை பயன்படுத்தினால் தவறேதும் இல்லையே..

ஆரம்பத்தில் குளங்களை தூர்வாரலாம் என்று முடிவு செய்த போது இப்பணியை செய்ய தயக்கம் காட்டிய மக்கள் இன்று “சேலம் மக்கள் குழு “என்ற அமைப்பை ஏற்படுத்திவிட்டோம் என்று சாதாரணமமாக சொல்கிறார்.. இப்போது இவரது அடுத்த கவனம் இந்த ஐயப்பன் வனத்தான் மீது உள்ளது. அதை பற்றி கேட்டோம்,

இது மொத்தம் நூற்று நாற்பது ஏக்கர், 2009 ல் வாங்கியவுடன் ஆங்காங்கே குளங்களை வெட்டி மழை நீரை சேகரித்தேன். மரங்கன்றுகளையும் மூங்கிலையும் நட்டினேன்.. இரண்டு வருடங்களுக்கு பிறகு மழை பொழிந்தது.. குளத்தில் நீர் தேங்கியது.. ஓடைகளில் நீர் ஓட ஆரம்பித்தது, பசுமை படர்ந்தது .. மூங்கில் வளர்ந்தது .. அதில் பல பொருட்களை செய்து விற்று ஒரு வருமானமும் வந்தது.. அன்று தரிசாக கிடந்த அந்தகிராமம் இப்போது நெல் நடவு செய்யும் அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று கூறினார்..அது உண்மையும் கூட..

இந்த ஐயப்பன் வனம் என்பதும் கூட இவரது தொலை நோக்கு பார்வைதான்.. இங்கே இருந்து கேரளா சென்று ஐயப்பனை வணங்குகிறோம், ஆனால் ஐயப்பன் நெய்யை கேட்க்கவில்லை வனத்தைத்தான் கேட்டது. ஆனால் நாம் வனத்தை அழித்து தெய்வத்தை வழிபடுகிறோம்.. ஆனால் இப்போதைய தேவை வனம்தான்.. அதனாலையே இந்த மலையில் ஐயப்பன் வடிவத்தில் மரங்களில் நட்டு ஐயப்பன் வனத்தை தமிழ்நாட்டிலேயே உறுவாக்கவே இந்த முயற்சி என்றார்..

அதே போல விறகிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஒரு கருவியை உறுவாக்கியுள்ளார்.. ஆனால் அதற்கு ஒரு பிள்ட்டர் (Fillter) தேவை படுகிறது அதை தயாரித்து கொடுக்க யாரும் முன்வரமறுக்கிறார்கள் என்று வேதனையோடு கூறினார்.. உண்மை தாங்க..

நம் அடுத்த சந்திகளுக்கு சுத்தமான நீர், நிலம், காற்று இவைகளை நாம் விட்டுச்செல்வதே மிகபெரிய சொத்தாக அவர்களுக்கு இருக்கும். நீர் மேலாண்மை புகழ் ராஜேந்திர சிங் போன்றவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் நம்ம ஊர் பியூஸ்மானுஷ் போன்றவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை எனும் போது வேதனையாக இருக்கிறது..

நம்மாழ்வார் அய்யா இருக்கும் போது அவரோட அருமை எனக்கு தெரியல ங்க.. ஆனா இப்போ தெரியுது.. அதே போல பியூஸின் அருமையும் அப்படித்தான்.. அதனாலதான் நாங்கள் அவருடன் கைகோர்த்து விட்டோம்.. இன்னும் ஏராளமான நல்ல திட்டங்களை பியூஸ் வைத்துள்ளார்..

மேலும் விபரங்களுக்கு
Piyush Manush 94432 48582



சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது! 

இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை. 

சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, நகரமலை இஸ்மான்கான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகிய ஏரிகளை நிறைத்தது. வாழப்பாடி வழியாக வழிந்தோடிய தண்ணீர் வலசையூர் தொட்டில் ஏரி, அணைவாரி முட்டல் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, நெய்க்காரன்ப்பட்டி ஏரி, செந்தாரப்பட்டி ஏரிகளை நிறைத்தது. கருப்பூர் வழியாக வழிந்தோடிய தண்ணீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது. 

ஆனால், இன்று பல ஏரிகளைக் காணவில்லை. அச்சுவான் ஏரி புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி விளையாட்டு மைதானமாகிவிட்டது. தாதுபாய் குட்டை, கொல்லங்குட்டை, பஞ்சந்தாங்கி, பச்சைப்பட்டி, சீலாவரி இவை எல்லாம் மண்ணுக்குள் மூச்சடக்கி வெகு காலமாகிவிட்டன. பூலாவரி ஏரிக்கு நீர் செல்ல சோழர் காலத்தில் கட்டப்பட்ட ராஜசேகரன் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சாக்கடை ஓடுகிறது. 17-ம் நூற்றாண்டில் இருங்கூர் பட்டையக்காரன் திருமலை அல்லாள இளைய நாயக்கனால் கட்டப்பட்ட 32 மைல் நீளமுள்ள ராஜா வாய்க்கால் எங்கே என்று தெரியவில்லை. 

இவ்வளவு அழிவுகள் நடந்த அதே சேலத்தில்தான் தமிழகத்திலேயே முதல்முறையாக ஏரிகளுக்கு மீண்டும் ஒரு பொற்காலம் பிறந்துள்ளது. கடந்த கால தவறுகளுக்குப் பரிகாரம் தேடி யதைப் போல தூர்ந்துப்போய், குப்பைமேடுகளாவும் சாக்கடையாகவும் இருந்த ஏரி, குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து புனரமைத்துள்ளனர். மக்களை ஒருங்கிணைத்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியது ‘சேலம் மக்கள் குழு’. 

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு கன்னங்குறிச்சி - மூக்கனேரி கருவேல முட்செடிகள் மண்டி பெருமளவில் ஆக்கி ரமிப்பில் இருந்தது. அதன் கரைகள் மலம் கழிக்கப் பயன்பட்டன. ஏரியில் பல இடங்கள் தூர்ந்து குப்பைகள் கொட் டப்பட்டன. துர்நாற்றம், சமூக விரோதச் செயல்கள் காரணமாக அந்தப் பக்கம் செல்லவே மக்கள் அஞ்சினார்கள். 

2009-ம் ஆண்டு அரசு அனுமதியுடன் அந்த ஏரியைத் தத்தெடுத்தது ‘சேலம் மக்கள் குழு’. ஏரியை மீட்பது குறித்து சேலம் நகரம் முழுக்க பிரச் சாரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களி டம் இந்தப் பிரச்சினை முன் வைக்கப் பட்டது. சில நாட்களிலேயே உணர்வால் ஒன்றுபட்டார்கள் மக்கள். பிரச்சாரம் எழுச்சியுற்றது. முதலில் உள்ளூர் வாசிகள் அங்கே அசுத்தம் செய்வதைத் தவிர்த்தனர். பணிகள் தொடங்கின. ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண் கள், பெண்கள் என மக்கள் 500 பேர் வரை கூடினார்கள். சில்லறை காசுகள் தொடங்கி ரொக்கம் வரை கையில் இருந்த காசை போட்டார்கள். தினக் கூலிக்கு செல்பவர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு வந்து கரைகளை சீரமைத் தார்கள். ஏரியில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நூற்றுக்கணக் கான லாரிகளில் அப்புறத்தப்படுத்தப் பட்டன. கருவேல முட்செடிகள் வேராடு பிடுங்கப்பட்டன. தூர்ந்திருந்தப் பகுதிகள் எல்லாம் தூர் வாரப்பட்டன. 

தூர் வாரியதில் மலை போல குவிந்தது வண்டல் மண். அதனை வீணாக்காமல் ஏரியின் நடுவே கொட்டி சிறு தீவு அமைத்தார்கள். 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தீவு சூழலியல்ரீதியாக தண்ணீரை சேமிக்கும் தன்மைக் கொண்டதாக அமைந்தது. 30 வாரங்களில் இந்தப் பணிகள் நடந்து முடிந்தன. ரூ.53 லட்சம் செலவானது. தொடர்ந்து 2010-ம் ஆண்டிலேயே ஏரி முழுமையாக நிரம்பியது. நடுவே இருந்த தீவில் மரங்கள் அடர்ந்து பறவைகள் சரணாலயமாக மாறியது. மக்கள் செல்லவே அஞ்சிய அந்தப் பகுதிக்கு இன்று குடும்பத்துடன் சென்று ரசிக்கிறார்கள். 

இதைவிட மோசமாக கிடந்தது அம்மாப்பேட்டை - குமரகிரி ஏரி. 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது அது. அம்மாப் பேட்டையின் சாக்கடை அனைத்தும் ஏரிக்குள் விடப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சியே ஏரிக்குள் குப்பைகளைக் கொட்டியது. 2013-ம் ஆண்டு இதனை கையில் எடுத்தது சேலம் மக்கள் குழு. மூக்கனேரியில் செய்ததுபோலவே வேலை செய்தார்கள். 40 வார விடுமுறை நாட்களில் பணிகள் நடந்தன. இன்று அந்த ஏரியும் நடுவில் பசுமைத் தீவுகளுடன் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. 

சேலம் நகரில் அரிசிப்பாளையத்தில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் தெப்பக் குளம் ஒன்று இருக்கிறது. 1640-களில் ராபர்ட் நோப்ளி என்பவரால் கட்டப்பட்ட இது, 1860-களில் சேலம் ஆட்சியராக இருந்த லாங்லி என்பவரால் புனர மைக்கப்பட்டது. மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இந்தக் குளம், 1980-களின் தொடக்கத்தில் அழியத் தொடங்கியது. குளம் குப்பைகளால் மேடிட்டு அந்தப் பகுதி எங்கும் சுகாதார சீர்கேட்டை பரப்பியது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அந்தக் குளத்தைக் கையிலெடுத்தது சேலம் மக்கள் குழு. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நீர் நிரம்பியிருக்கிறது தெப்பக்குளம். அடுத்ததாக கடும் சீரழிவில் இருக்கும் பள்ளப்பட்டி ஏரியைத் தத்தெடுக்க இருக்கிறது சேலம் மக்கள் குழு. 

அரசை மட்டுமே நம்பியிருக்காமல் மக்கள் மனது வைத்தால் நமது நீர் நிலைகளை மீட்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது சேலம். 

No comments:

Post a Comment