Tuesday 18 October 2016

நீர் போராட்டக் கதைகள்-நெல்லை நி.நீ.பா. சங்கம்

நகரமயமாக்கலால் குளங்கள் பலவும் காணாமல் போய்விட்ட நிலையில், திருநெல்வேலி மாநக ராட்சி எல்லையில் 51.18 ஏக்கர் பரப்பிலான குளத்தை மீட்டெடுத்து, கடந்த 14 ஆண்டுகளாக மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் பராமரித்து வருகின்றனர்.



தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகரில் குளங்கள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க்கொண்டு இருக் கின்றன. இருக்கும் குளங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. நகரமயமாக்கல் நெருக்கடியில் பாழடைந்த ஒரு குளத்தை மீட்டெடுத்து பராமரிக்கிறது திருநெல்வேலி மாநகர நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கம். பாளை யங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி யில் 51.18 ஏக்கர் பரப்பில் உள்ள பெரியகுளம் கடந்த 2002-ம் ஆண்டுக்கு முன் வரையில் பராமரிப்பின்றி, சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில், தண்ணீர் பெருகாமல் காட்சியளித்தது. கரைகள் கூட இல்லாமல் குளத் துக்கான அடையாளத்தைத் தொலைத்திருந்தது.

இப்பகுதியில் குடியேறிய ஓய்வு பெற்ற அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து, திருநெல்வேலி மாநகராட்சி நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தை 2002-ல் உருவாக்கினர். இச்சங்கத்தினர் பெரியகுளத்தை மீட்டு உருவாக்கம் செய்யும் களப்பணியில் இறங்கினர்.

சொந்த நிதியில் பணி

அரசுத் துறைகளை எதிர்பார்க் காமல் தங்களது சொந்த நிதியில் குளத்தில் கரைகள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத் தல் என்று பல்வேறு பணிகளையும் படிப்படியாக மேற்கொண்டனர். இதற்காக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை உருவாக் கினர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக இப்பகுதி மக்கள் தாங்களாகவே முன்வந்து நன்கொடைகளை வழங்கினர். சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் சொந்த நிதியில் ரூ.2.50 லட்சத்தில் குளத்தை புனர மைப்பு செய்யும் பணிகள் தொடங் கப்பட்டன. ரூ.1000-க்கும் மேல் நன் கொடை வழங்கியவர்களின் பெயர் கள் பொறித்த கல்வெட்டை குளக் கரையில் நிர்மாணித்தனர். குளத் தில் குப்பை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் அறிவிப்புப் பலகைகளையும் வைத்தனர்.

சோலையானது கரைகள்

கரைகளை பலப்படுத்திய பின் 2005-ம் ஆண்டில் அவற்றில் 2 ஆயிரம் பனங்கொட்டைகளை புதைத்து வைத்தனர். பலர் தங்கள் தாத்தா, பாட்டி பெயர்களில் மரக் கன்றுகளை நடுவதற்கும் சங்கத்தி னர் ஊக்கம் அளித்தனர். அவர்களின் பெயர்களையும் அதில் எழுதி வைத்தனர். அதன் பயனாக தற் போது அந்த மரக்கன்றுகள் மரமாக வளர்ந்து வருகின்றன. பனங் கொட்டைகளும் முளைத்து பனை மரங்களாக வளர்ந்து வருகின் றன. இதனால் குளக்கரைகள் பலப்படுத்தப்பட் டுள்ளன.

நிலத்தடிநீர் பாதுகாப்பு சங்கத் தின் தலைவர் பொறியாளர் டி.சண்முகசுந்தரம், செயலாளர் எஸ்.முத்துசாமி, பொருளாளர் பி.கோபாலகிருஷ்ணன், திட்டச் செயலாளர் என்.காஜாமைதீன் மற் றும் நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த சில ஆண்டு களுக்கு முன் இக்குளத்தை நிரப்பி, காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. மாவட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

நிலத்தடி நீர் உயர்வு

20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு மழையின்போது குளம் பெருகியது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இப்போது நிலத்தடி நீர் பிரச்சினையே இல்லை. இந்த குளம் நிரம்பினால் 3 ஆண்டு களுக்காவது இப்பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினை இருக்காது.

மழைக்காலத்தில் குளத்தில் உடைப்பெடுக்காமல் இருக்கவும், தண்ணீர் வழிந்தோடவும், நீர்வரத்து கால்வாய்களைச் சீரமைக்கவும் எங்களது சொந்த நிதியில் பணி களை செய்து வருகிறோம். பாளை யங்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தை, தற்போது தமிழ்நாடு நகர்ப்புற உறுதி செய்த வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.2.75 கோடியில் புதுப்பித்து புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

தற்போது ஓரளவு தண்ணீருடன் காணப்படும் இந்த குளத்துக்கு, விருந்தினர்களாக பறவைகளும் வந்து செல்கின்றன.


1 comment: