Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்-தமிழன் பசுமைக் கரங்கள்

கல்லூரி பேராசிரியர் முதல் கட்டிடத் தொழிலாளர்கள் வரை இணைந்து, நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான பணிகளில் வாரத்தில் ஒருநாள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். மேலும், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வருகின்றனர்.



தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத் தில் ‘தமிழன் பசுமைக் கரங்கள்’ என்ற தன்னார்வக் குழு கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரு கிறது. இந்தக் குழுவில் கல்லூரி பேராசிரியர் முதல் கட்டிடத் தொழி லாளர்கள் வரை இணைந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். மண்ணியாற்றில் இருந்து பிரிந்து செல்லும் கொங்கன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண் ணீர் வராத நிலை இருந்தது. இதை யடுத்து, உம்பளப்பாடி கிராமத்தில் இந்தக் குழுவினர் வாய்க்காலை சுத்தம் செய்து அதில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட னர்.

சாலபோகம் கிராமத்தில் சுமார் 50 சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீர் நிலையைப் பாதுகாக் கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாபநாசம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற் பட்ட கிராமங்களில் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்தும் வருகின்றனர்.

இதுகுறித்து இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.லெனின் பாஸ்கர் கூறியபோது, “பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50 பேர் இந்தக் குழுவில் உள்ளனர். கல்லூரி பேராசிரியர் தொடங்கி கட்டிடத் தொழிலாளர்கள் வரை இதில் உள்ளனர்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரின் நோக்கமும் நீர்நிலை களைப் பாதுகாப்பது என்பதுதான். வாரந்தோறும் ஒன்றுகூடும் நாங்கள், அடுத்து என்ன களப்பணி செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம்.

சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும். குளங் களையும், வாய்க்கால்களையும் பராமரிக்க வேண்டும். சாலையோ ரங்களில் மரங்களை நட வேண் டும் என்பதையே எங்களின் குறிக் கோளாகக் கொண்டு, முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment